Monday, November 3, 2008

அடுத்த தளபதிக்கு போரை விட்டுச்செல்லமாட்டேன்! அன்று கூறியதையே இன்றும் கூறுகின்றேன். போரின் 80% நிறைவு. இராணுவத்தளபதி.



இராணுவ கஜபா அணியின் 25ஆம் ஆண்டு நிவையொட்டி அனுராதபுரம் சாலியபுர படைத்தளத்தில் நிகழ்ந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பேசும்போதே இராணுவத்தளபதி சரத்பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், போரில் எமது படையினர் மிகவும் திறமையாக செயற்படுகின்றனர். அவர்களின் அந்த வீரம் மிகுந்த சாதனைகளுடாக எம் தேசம் வெளிச்சம் பெறும் என நான் நம்புகின்றேன். போரிலே புலிகளிடம் இருந்த 80% நிலப்பரப்பை படையினர் தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர். 12000 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நாம் கிளாலி களப்பை எமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்கு இன்னும் ஏழு கிலோமீற்றர் தூமே உள்ளது. அதன் நிறைவில் யாழ்குடாநாட்டிற்கான தரைவழிப்பாதை திறக்கப்படும். என முழங்கிய அவர் தனது பதவிக்காலத்தினுள் இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவேன் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment