5 மாகாணங்களுக்கான மாகாணசபைத் தேர்தல் விரைவில்.
5 மாகாணங்களுக்கான மாகாணசபைத் தேர்தல்களை மிக விரைவில் நாடாத்த திட்டமிட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போது பொதுத்தேர்தல் ஒன்றை நாடாத்த வேண்டிய தேவை அரசிற்கு இல்லை. குடந்த முறை வரவுசெலவுத்திட்டம் பாரளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட போது அது தோற்கடிக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். துற்போது எமது அரசாங்கம் பாராளுமன்றத்தில் 42 மேலதிக ஆசனங்களைக் கொண்டுள்ளது. கடந்த அதிபர் சந்திரிகா குமாரணதுங்கவின் ஆட்சியில் நாம் ஒரே ஒரு ஆசனத்தையே மேலதிகமாக கொண்டிருந்தோம்.
அத்துடன் நடந்து முடிந்த 3 மாகாணசபைக்கான தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 60 மேற்பட்ட விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மறுபுறத்தில் போர் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறும் அதேநேரத்தில் நாட்டின் அபிவிருத்தி பணிகளும் அதேவேகத்தில் இடம்பெறுகின்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டை பாரமெடுத்த நிலையில் அது இல்லை பல்வேறு முன்னேற்றங்களை கண்டுள்ளது என்றார்.
0 comments :
Post a Comment