Friday, November 7, 2008
இன்று தனது 42 வது பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மானுக்கான வாழ்த்துக்கள்.
வாழ்க நீ பல்லாண்டு!
ஆட்டிப்படைப்பவருக்கும்
அஞ்சமாட்டான் அம்மான்
அமைச்சர்கள் எவருக்கும்
அஞ்சமாட்டான்,
காட்டிக் கொடுப்போருக்கும்
அஞ்சமாட்டான் அம்மான்
கருத்தில்லாக் கட்சிகளுக்கும்
அஞ்சமாட்டான்.
குள்ளநரித்தனக் கூட்டங்கள்
எல்லாம் இனி மெல்ல
நகர்ந்திடும் காலம் அல்லோ
உள்ள திறமைகள் ஒன்றுபடுத்தி
இனி-நல்ல சுதந்திரம் அமைத்துக் கொடு.
சாவைத் தொலைத்தவன் நீ
மக்கள் வாழ்வுக்காய்!
தாழ்மை உணர்வுண்டு, ஏழ்மையைத்
துடைத்து எம்மினம் காப்பாய்.
அறிவின் சுரங்கம் நீ
போர்த்திறனில் அரங்கம் நீ
தமிழன் இருளை அறுத்தே
எம்மினத்தை வளர்ப்பாய்.
ஆண்ட பரம்பரை நாம்- மீண்டும்
ஆள வழிசெய்வாய்.
மானத் தமிழர்கள் நாம்-எம்மினத்தின்
மாசு துடைத்தே மானம் காப்பாய்
உரிமை உணர்வே, விடுதலை நெருப்பே
மக்களின் மனம் வென்ற
கிழக்கின் வெற்றி முத்தே
முயன்ற தமிழரின் போராட்டம்
மூக்குடைபட்டதே மிச்சம்
பெற்ற பேறென்ன மக்கள்
குட்டிச் சுவராகியதே உண்மை.
செத்துச் சீரழிந்தது போதும்
இனிக் கட்டி எழுப்பிடு எம்மினத்தை
ஆளப்பிறந்தவர் நாமே- இனி
எம்மினத்திற்கு அம்மானே ஏணி.
அந்தக் காவியத் திருமகன்
கருணா அம்மானுக்கு தமிழினத்தின்
இதயம் கனிந்த பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் வெல்க திடமுடன்.
சகாதேவன்.
புவிதனிலே பிறந்து, 42 ஆம் வருடத்தைத் தழுவிச் செல்லும் எம்தலைவன் கருணா அம்மானுக்கு எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
விடுதலை, விடுதலை என்று வீரவசனம் மட்டும் பேசி...
விளைந்த எம் சந்ததிகளையெல்லாம்
வீரவேங்கைகள் என்ற பெயரில்,
விண்ணுலகிற்கு அனுப்பிவைத்த
போலித் தலைவர்கள் மத்தியிதிலே......
விடுதலையுடன், விவேகமாயும் சிந்தித்திட்ட
எம் தலைவா வாழ்க நீ நீடுழி.
ஆசை பிடித்தவர்களும், அழுக்குமனம் கொண்டவர்களும்,
பொய்யும் புரட்டையும் சொல்லி புறம்தள்ள எண்ணிய போதும்,
கோபமே கொள்ளாது கொள்கையுடன் நடந்துவந்த எம் தலைவா....
நீ வாழ்க நீடுழி.
எந்தப் பக்கம் திரும்பினும், உனக்கோர் தடைக்கல்லை
இட்டுப்பார்க்க எண்ணம் கொண்ட கயவர்கள் எத்தனையோ....
அவர்களையும், படிப்பினையாய்.....இட்ட தடைகளையும்
விழிப்புணர்வாய் கடந்து வந்த எம் தலைவா
வாழ்க நீ நீடுழி.
போர்க்களத்திலும் நீ ஓர் தனி நட்சத்திரம்,
இப்போது அரசியல் அரங்கிலும் நீ ஒளிவிட்டுச்
செல்லும் வால் நட்சத்திரம்.
மக்கள் ஆதரவு உன்பக்கம்.
ஆதலால், கயவர் கண்களில் ஒர் தயக்கம்.
வெல்லார்.....வெல்லார்......
உன்னை இனி எவரும் வெல்லார்....
மக்கள் உன்பக்கம் இருக்கையிலே,
மந்தைகள் கொண்டா அவர்கள் உன்னை வெல்வார்.
முன்னரோ உனக்கு அறிவு விருத்தி,
தற்போதோ உனக்கு வயதும் விருத்தி,
ஆதலினால் உனக்கு அநுபவமும் மிகுதி.
ஆகவே, சொல்கிறோம் உனக்கு இனி தோல்வியே எதிரி.
நடப்பாய்.... நடப்பாய் நன்றாய் நடப்பாய்....
அரசியல் அரங்கில் நன்றாய் நடப்பாய்....
வாழ்வாய்... வாழ்வாய்.... நீ நீடுழி வாழ்வாய்...
மக்கள் இன்புற்று வாழ நீ நீடுழி வாழ்வாய்...
ஆதலால் சொல்கிறோம்.. நீ.. வாழவேண்டும்.. நீடுழி.
அதற்காக வேண்டுகிறோம். கடவுளை நாடி.
வாழ்க நீ.....பல்லாண்டு. வளர்க நீ இனிதே ஆண்டு...
ஊடகப்பிரிவு.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
அகவை 42ல் தடம்பதிக்கும் தமிழினத்தின் தானைத் தலைவன் கிழக்கின் விடிவெள்ளி கருணா அம்மானுக்கு எனது பிறந்த தின நல்வாழ்த்துகள்.
தமிழினத்ததைக் காக்க தயவோடு சிந்தித்த
தனிபெருந் தலைவனே!
தடைகளைத் தாண்டியும் தன்னிகராய்
உதயமான கானகத் தமிழனே!
தமிழரின் விடிவுக்காய் தரிசனம் பூண்ட
கிழக்கின் உதய சூரியனே- உம்
சுதந்திர பயணத்தின் சுவடுகளை
நோக்கி தமிழினம் நடைபோடும்
காலம் இன்றே.........
எட்டுத்திக்கும் திசைகளிலும்
கருணா அம்மான் எனும் நாமம்
தென்றலோடு உலாவி எம் மக்களின்
சுதந்திர வாழ்வுக்கு வழிகாட்டியாக
உம் பணி அமைய
எனது இதயங்கனிந்த பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்......
இவ்வண்ணம்
லவனியன்
ஊடகப் பிரிவு
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
No comments:
Post a Comment