சுவிர்சலாந்து நாட்டில் 22வயது யுவதியிடம் சென்ற 52 வயது இலங்கையர் சில்மிசத்தின் பின்னர் குத்திக்கொலை.
சுவிர்சலாந்து பேர்ன் மாநிலத்தில் புளோரா எனும் பாக்கில் 22 வயது யுவதியிடம் சென்ற 52வயது இலங்கையர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக தெரியவருவதாவது இந்த பாக் பகுதியில் இருழ்சூழ்ந்த பின்னர் போதைப்பொருள் வியாபாரமும் விபச்சாரமும் இடம்பெறுவதாகவும் கடந்த புதன்கிழமை இரவு அப்பகுதிக்கு சென்ற 52 வயது இலங்கையர் ஒருவர் 22 வயது பெண்ணினால் குத்திகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த பார்க்கின் அயல் வீட்டுப் பெண் நபர் ஒருவர் அலறும் சத்தம் கேட்டு பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து அங்கு விரைந்த பொலிசார் ஒருவர் இறந்து கிடக்கக் கண்டுபிடித்துள்ளதுடன் கொலையாளி என சந்தேகிக்கப்படும் 22 வயது சுவிஸ்நாட்டு யுவதியையும் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் கைதுசெய்யப்பட்டுள்ள யுவதியும் இறந்த நபரும் கொலைசெய்யப்படுவதற்கு முன்னர் உடலுறவுகொண்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன் யுவதி தானே இவரை கத்தியால் குத்தியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். கொலைக்காக பாவிக்கப்பட்ட கத்தி மீட்க்கப்பட்டுள்ளதுடன் அவர் கொலையை புரிந்தமைக்கான காரணம் என்ன என்பது இதுவரை வெளிவரவில்லை. இப்பிரதேசத்தில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதும் அவர்கள் போதைபொருள் கொள்வனவு செய்வதற்காகவே அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்கள் என்றும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment