கிழக்கு மாகாணத்தின் விவசாய கைத்தொழில் புரட்சி ஆண்டாக 2009ம் ஆண்டு பிரகடனம்.
கிழக்கு மாகாண சபையின் 2009ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இறுதி நாளான இன்று விவசாய, கால்நடைஉற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில்அபிவிருத்தி, மீன்பிடி அமைச்சு மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.
இவ்விவாதத்தினை ஆரம்பித்து வைத்துப் பேசிய மாகாண அமைச்சர் து.நவரத்தினராஜா தனது அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விபரங்களைத் தெரிவித்தார். பாதீட்டில் மீண்டெழும் செலவீனங்களுக்காக 9891மில்லியன் ரூபாவும் மூலதனச்....... செலவீனங்களுக்காக 1482மில்லியன் ரூபாவுமாக மொத்தம் 11373 மில்லியன் ரூபா உள்நாட்டு நிதி மூலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது. இதற்கு மேலாக வெளிநாட்டு உதவிகளாக 444மில்லியன் ரூபாவும் சேர்த்து மொத்தம் 11817மில்லியன் ரூபா இம் மாகாணத்தில் 2009ம் நிதி ஆண்டில் பிரயோகிக்கப்படவுள்ளது. இம் மொத்த நிதி ஒதுக்கீட்டுத் தொகையில் இவ் அமைச்சிற்கு 424மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகையினை எமது அமைச்சினது குறிக்கோள்களையும் நோக்கத்தினையும் அடையக்கூடியவாறு செலவு செய்ய பல்வேறு வியுகங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்த நன்கு திட்டமிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பட்டார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் கிழக்கு மாகாணத்தில் 70 வீதமான மக்கள் விவசாய கால்நடை, கிராமியக்கைத்தொழில், மீன்பிடித்துறைகள் மூலமே தமது தொழில் வாய்ப்பினையும் வருமானத்தையும் பெறுகின்றனர். இம் மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியினையும் தொழில் வாய்ப்பினையும் ஏற்படுத்தி வழங்குவதில் முக்கிய பங்களிப்புச்செய்யும் அமைச்சாக எனது அமைச்சு செயற்படும் எனவும் 2009ம் ஆண்டினை கிழக்கு மாகாணத்தின் விவசாய கைத்தொழில் பரட்சி ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எதிர் கட்சி சார்பில் E.P.R.L.F உறுப்பினர் துரைரெட்ணம் இக் குழுநிலை விவாதத்தில் கருத்துத் தெரிவிக்கையில் விவசாய நிலங்கள் மேய்ச்சல் தரைகள், மீன்பிடி எல்லை என்பன இன்னும் இரானுவத்தினரினது கட்டுப்பாட்டிலிருந்து தளர்த்தப்படவில்லை. இதனைக்கருத்திற்கொண்டு விவசாய அமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை வெகு விரைவில் எடுக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.
0 comments :
Post a Comment