Friday, November 14, 2008

பொலிஸாருக்கு எதிராக செய்யப்பட்ட 1827 முறைப்பாடுகளில் 51 முறைப்பாடுகளே விசாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் பொலிஸ் விசாரணைக் கமிசனில் பொலிசாருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமை, அடித்து துன்புறத்தல், சட்டத்துஷ்ப்பிரயோகம், பக்கச்சார்பு, சட்டத்திற்கு புறம்பான கைதும் தடுத்து வைத்தலும், பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி தடுத்து வைத்தல், லஞ்சம் வாங்குதல் போன்றவற்றிற்காக செய்யப்பட்ட 1987 முறைப்பாடுகளில் 51 முறைப்பாடுகளுக்கான பொலிஸ் அதிகாரிகளுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் கண்டி, மாத்தறை பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு விசாரணைகள அல்லது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அதிகளவான முறைப்பாடுகள் பொலிஸாருக்கெதிராக பதியப்பட்டிருந்ததுடன் பாணந்துறை 38, கம்பகா 32, நீர்கொழும்பு 32, அனுராதபுரம் 28, இரத்தினபுரி 26, புத்தளம் 25, வெலிகம 24, காலி 24 என்ற அளவிலும் பொலிசாருக்கெதிரான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென பொலிஸ் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment