பரந்தன் பிரதேசத்தில் இருந்து மேலும் 17 பொதுமக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் வந்துள்ளனர்.
நேற்று அதிகாலை புதிதாக கைப்பற்றப்பட்டுள்ள இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசமான விடத்தல்பளைப் பிரதேசத்திற்கு புலிகளின் பிடியில் இருந்த பதின்ஏழு பொதுமக்கள் பாதுகாப்பு தேடி வந்துள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு 4 சிறுமிகளும் 1 சிறுவனும் 5 ஆண்களும் 7 பெண்களும் அடங்வதாகவும் அவர்களுக்கான அத்தியாவசிய வசதிகள் வழங்கப்பட்டு வவுனியாவில் உள்ள உள்ளக இடம்பெயர்விற்கான இடைத்தங்கல் முகாமிற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பாதுகாப்புத்தேடி வந்துள்ள அவர்கள் தாம் புலிகளின் கட்டுப்பாட்டில் சொல்லொண்ணாத் துயரங்ளை அனுபவித்ததாகவும் அத்துயரங்களை தொடர்ந்தும் அனுபவிக்க முடியாமையால் தாம் தம் உயிர்களைப் பணயம் வைத்தே இவ்வாறு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment