Friday, November 28, 2008
பம்பாயில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 160 கொல்லப்பட்டுள்ளனர் அதில் 15 பேர் வெளிநாட்டுக்காரர்கள். 327 பேர் காயமடைந்துள்ளனர்.
மும்பையில் மூன்று நாள்களாகியும் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து தாஜ், நரிமன் ஹவுஸ் ஆகிய இரு இடங்களும் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.
தாக்குதல் தொடங்கி மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை இரவு தான் ஓபராய் ஹோட்டல் முற்றிலுமாக மீட்கப்பட்டது. நாள் முழுவதும் நடந்த துப்பாக்கி சண்டையின் இறுதியில் அங்கிருந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுவரை நடந்த சண்டையில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.(படங்கள் உள்ளே) ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 பொலீஸாரும், அதிரடிப் படை கமாண்டோ வீரர் இருவரும் கொல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட தீவிரவாதி பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்தார்.
தாஜ் ஹோட்டலின் புதிய கட்டடத்திலிருந்து தீவிரவாதிகள் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டனர். இனால் பழைய கட்டத்தில் ஓன்று அல்லது இரண்டு தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சில பிணைக் கைதிகளும் இருக்கலாம் என்று கமாண்டோ படை தெற்குப் பிரிவு தலைமை அதிகாரி தம்புராஜ் தெரிவித்தார்.
தீவிரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஓபராய் ஹோட்டலில் இருந்த 100 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தேசிய கமாண்டோ படை தலைமை இயக்குநர் ஜே.கே தத் கூறினார். இதில் பலர் வெளிநாட்டவர். இதில் ஓரு பிணையாளி 6 மாதக் குழந்தையுடன் வெளியே வந்தார். அப்போது அவரது முகத்தில் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை இன்று இவர் கூறினார்.
ஓபராய் ஹோட்டலில் ஓவ்வொரு அறையாகச் சோதனை செய்து தீவிரவாதிகள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டோம் என்றும் அவர் கூறினார். அந்த ஹோட்டலிலிருந்து 24 சடலங்கள் கைப்பற்றப்பட்டதாக மும்பை பொலீஸ் இணையர் ஹசன் கபூர் தெரிவித்தார்.
இந்த ஹோட்டலில் பிணைக் கைதிகள் 6 பேரை புதன்கிழமை இரவு தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அவர்களை மாடிக்கு அழைத்துச் செல்லும்போது படிகளில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளதாக அவர் கூறினார்.
தாஜ் ஹோட்டலில் சண்டை நீடிப்பு: தாஜ் ஹோட்டல் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டுவிட்டது என்று வியாழக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. இனால் தற்போது ஹோட்டலுக்குள் இருந்து கொண்டு ஓன்றிரண்டு தீவிரவாதிகள், கமாண்டோ படையினரை நோக்கி சுட்டு வருவதால் தொடர்ந்து அங்கு சண்டை நடந்து வருகிறது.
இந்த ஹோட்டலில் உள்ள சில அறைகள் உள்புறமாக பூட்டப்பட்டுள்ளது. உள்ளே இருப்பவர்கள் பீதியில் கதவைத் திறக்க அஞ்சுகின்றனர். அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹோட்டலில் இருந்து 2 ஐ.கே.47 ரக துப்பாக்கி, கையெறி குண்டுகள், துப்பாக்கிகளை கமாண்டோ படையினர் கைப்பற்றி உள்ளனர்.
நரிமன் பவனிலும் தொடர்கிறது சண்டை: இஸ்ரேலியர்களின் குடியிருப்பு உள்ள நரிமன் ஹவுஸை தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீட்க தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் கமாண்டோ படை வீரர்கள் நரிமன் ஹவுஸ் மாடியில் இறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதிரடி தாக்குதலுக்குத் தயாராக உள்ளனர்.
No comments:
Post a Comment