புலிகளின் தடையை உடைத்து அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் வரும் மக்களின் தொதை அதிகரிக்கின்றது. இன்று 126 பேர் வருகை.
இன்று காலை கனகராயன்குளம் பிரதேசத்தில் இருந்து 93 பொதுமக்கள் பாதுகாப்பு தேடி ஓமந்தை சோதனைச்சாவடியை வந்தடைந்திருந்தனர். அதைத்தொடர்ந்து இன்று பின்நேரம் 18 ஆண்களும் 15 பெண்களுமாக 33 பேர் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் வந்துள்ளதாத பாதுகாப்பத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அச்செய்தியில் புலிகளின் தடையை மீறி அரசகட்டுப்பாட்டினுள் வரும் மக்களின் தொகை மென்மேலும் அதிகரித்து வருவதாகவும் இம்மாதம் 21ம் திகதியிலிருந்து மாத்திரம் 373 பேர் அரசகட்டுப்பாட்டுப் பகுதிகளுள் பாதுகாப்புத் தேடி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment