Monday, November 3, 2008
புலிகளின் 12 உடலங்களை ஐசிஆர்சி ஏற்றுகொண்டனர்.
நேற்று முன்தினம் நாச்சிக்குடாபிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட 12 புலிகளின் உடலங்கள் சர்வதேச சங்கத்தினரினூடாக புலிகளுக்கு அனுப்பி வைக்கப்ட்டுள்ளது. மோதல்களைத் தொடர்ந்து படையினர் அப்பிரதேசத்தில் மீட்டெடுத்த உடலங்களை பொலிசார் ஊடாக மன்னார் வைத்தியசாலையில் பாரப்படுத்தி இருந்தனர். மன்னார் வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்ட்டிருந்த சடலங்களை பார்வையிட்ட மன்னார் மாவட்ட நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் புலிகள் உரிமைகோரும் பட்சத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரூடாக புலிகளிடம் உடலங்களை கையளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இவ்விடயம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் அவ்வுடலங்களை பாரமெடுத்து வன்னிக்கு எடுத்துச் சென்றுள்ளனா. ஊடலங்களைத் தாங்கிய பாரஊர்தி நேற்றுபிற்பகல் 3 மணியளவில் ஓமந்தை சாவடியூடாக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இங்கு 10 பெண்புலிகளதும் 2 ஆண்புலிகளதும் சடலங்கள் அடங்குவதாகவம் இத்தாக்குதலில் புலிகள் பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவம் பாதுகாப்பமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment