கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளின் நிமித்தம் பாராளுமன்ற உறுப்பினர்களான் 11 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றியீட்டிய தமது கட்சியை சேர்ந்த பத்து உறுப்பிர்களும் முன்னணியின் தேசியப்பட்டியல் முலம் பாராளுமன்ற உறுப்பினரான ஒரு உறுப்பினருமாக 11 பாராளுமன்ற
உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனதா விமுக்தி பெரமுன அறிவித்துள்ளது. இப் 11 பேரில் அக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான விமல் வீரவன்சவும் அடங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment