Thursday, November 27, 2008

தீவிரவாதிகளின் தாக்குதலில் 101 பேர் பலி. பீதியின் உச்சத்தில் மும்பாய்



மும்பையில் தீவிரவாதிகள் நடத்தி வரும் அதிபயங்கர தாக்குதலில் இதுவரை 101 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

புதன்கிழமை நள்ளிரவு தொடங்கி 24 மணி நேரத்துக்கும் ஆதிகமாக இத் தாக்குதல் நீடித்து வருகிறது.

தங்களது பிடியில் உள்ள தாஜ், ஓபராய் ஹோட்டல்கள் மற்றும் நரிமன் கட்டடத்தை தீவிரவாதிகள் வியாழக்கிழமை மாலை வெடிகுண்டுகளைக் கொண்டு தகர்த்தனர். இதனால் புகை மண்டலத்துடன் தீ மள மள என்று ஏரிந்து வருகிறது.

இந்த இரு ஹோட்டல்களிலும் 300இற்கும் மேற்பட்டோரை தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்தனர். இதில் தற்போது ஏத்தனை பேர் உயிருடன் உள்ளனர் ஏன்று தெரியவில்லை.

தாஜ், ஓபராய் ஹோட்டல்களை விடுவிக்க அதிரடிப் படையினஈஈஈஈஈh முற்றுகையிட்டு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றர்.

அதிரடிப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. அதிரடிப்படையினர் ஹோட்டல்களை மீட்பதைத் தடுக்க தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கி வருகின்றனர். வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ கொழுந்துவிட்டு ஏரிந்து வருகிறது. இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.

துப்பாக்கி சுடும் சத்தம், குண்டு வெடிப்பு, கொழுந்து விட்டு ஏரியும் தீ ஏன இந்தப் போர்க்கள காட்சி மும்பை மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

இந்தச் சண்டையால் தாஜ், ஓபராய் ஹோட்டல்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

சண்டையில் தாஜ் ஹோட்டலின் ஓரு பகுதி தீப் பிடித்து எரிந்தது. அதுபோல் ஓபராய் ஹோட்டல் மற்றும் நரிமன் கட்டடத்திலும் அதிரடிப் படையினர் உள்ளே நுழைவதைத் தடுப்பதற்காக தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடித்தனர் இதில் ஹோட்டல் உள்ள பல அறைகளில் தீ மள மள ஏன்று பிடித்து நெருப்பு பந்து போல் எரிந்து வருகிறது. ஹோட்டலின் 4pவது மாடி பலத்த சேதமடைந்துள்ளது. இந்த ஹோட்டலில் 200 இற்கும்; மேற்பட்டோர் சிக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களின் கதி என்ன ஏன்று தெரியவில்லை.

ஓபராய் ஹோட்டலில் 10 அல்லது 12 தீவிரவாதிகள் இருப்பார்கள் ஏன்று நம்பப்படுகிறது. பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிக்க தீவிரவாதிகள் பெரும் தொகையை உடாக கேட்டுள்ளனர். இனால் ஆதை ஏற்க அரசு மறுத்துவிட்டது.

இந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த அதிபயங்கர தாக்குதலால் மும்பை நகரம் முழுவதும் பீதியில் சிக்கி ஊள்ளது. எந்த நேரத்தில் ஏன்ன நடக்குமோ ஏன்ற அச்சம் பரவலாகக் காணப்படுகிறது.

101 பேர் சாவு: புதன்கிழமை இரவு முதல் தீவிரவாதிகள் நடத்தி வரும் பயங்கர தாக்குதலில் இதுவரை 101 பேர் கொல்லப்பட்டனர். 200 இறுகம் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயர் ஆதிகாரி உள்பட பொலீஸ் தரப்பில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

முன்பு எப்போதும் இருந்திராத வகையில் தீவிரவாதிகள் மும்பையில் கொடூரத் தாக்குதலை புதன்கிழமை நள்ளிரவு முதல் நடத்திவருகின்றனர். ஏம்.வி. இல்பா என்ற கப்பல் மூலம் கடல் வழியாக மும்பை நகருக்குள் புகுந்த தீவிரவாதிகள் நகரின் வௌ;வேறு குழுக்களாகப் பிரிந்து பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். ஹோட்டல்கள், ரயில் நிலையம், உணவுவிடுதி உள்பட 10 இற்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தினர். கண்ணில் பட்டவர்களை ஏல்லாம் அவர்கள் சுட்டுத் தள்ளினர். கையெறி குண்டுகளை வீசித் தாக்கினர்.

தாஜ், ஓபராய் இரு நட்சத்திர ஹோட்டல்களில் புகுந்து அங்கு இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாகப்பிடித்து வைத்துள்ளனர். பிணையாள்களையும் ஹோட்டல் ஊழியர்களையும் பொலீஸ்காரர்களையும் அவர்கள் கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றனர்.

இரு ஹோட்டல்களிலும் ஏஞ்சியுள்ள 300 இற்கும் மேற்பட்டவர்களை மீட்க தற்போது அதிரடிப் படை போராடி வருகிறது. ஹோட்டலின் 3 தளங்களை அதிரடிப்படை கைப்பற்றி அங்கிருந்தவர்களை மீட்டது.

7 தீவிரவாதிகள் சாவு: அதிரடிப் படையினர் தாக்கியதில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஓருவர் உயிருடன் பிடிபட்டுள்ளார்.


No comments:

Post a Comment