இந்தியாவை ஓட்டிய எல்லைப் பகுதியில் கூடுதலாக சுமார் 1 லட்சம் பாதுகாப்புப் படை வீரர்களை குவிக்கப் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மும்பை தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பிருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியதை அடுத்து பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்தியாவின் குற்றச்சாட்டை அடுத்து எல்லைப் பகுதியில் போர் எற்படலாம் என்ற பதற்றம் நிலவுகிறது. எனவே, எல்லைப் பகுதியில் கூடுதல் வீரர்களை இந்தியா குவித்தால் பாகிஸ்தானும் கூடுதல் வீரர்களை குவிக்கத் தயங்காது. இதுபோன்ற நிலையில் தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படாது. அப்கானிஸ்தான் எல்லையை ஓட்டியப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் வரவழைக்கப்பட்டு இந்தியாவை ஓட்டிய எல்லைப் பகுதியில் குவிக்கப்படுவர்.
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் 90,000 முதல் 1,00000 வரையிலான வீரர்கள் தலிபான்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே வரவழைக்கப்பட்டு இந்தியாவை ஓட்டிய எல்லைப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர்'' என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2003 இண்டு முதல் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் எல்லைப் பகுதியில் போர் உருவாகும் அபாயம் நிலவுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவால் பாகிஸ்தானை தாக்க முடியாது: ஆனால், அரசியல் நோக்கர்களின் இந்தக் கருத்தை பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி கான் மறுத்துள்ளார். மும்பை ஹோட்டல்கள் மீதான தாக்குதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் இல்லை. எனினும், இந்தியாவால் பாகிஸ்தானை தாக்க முடியாது. ஏனெனில் இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் கைவசம் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
நன்றி தினமணி
No comments:
Post a Comment