அமைச்சர் மைதிரிபால சிறிசேன மீது இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய குண்டுதாரிக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டுதாரி தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்ற வெள்ளவத்தை பெர்னாண்டோ மாவத்தையிலுள்ள வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடாக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். அமைச்சர் மைதிரிபால சிறிசேனவை இலக்கு வைத்து கடந்த வாரம் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் சம்பந்ப்பட்ட குண்டுத்தாரி மற்றும் அவரது தாயார் எனக் கூறப்படுகின்ற பெண் ஒருவர் நோயாளிகள் எனக் கூறப்பட்டு குறித்த வீட்டுக்கு அழைத்து வரப்பட்டு மேலும் இவருமாக நான்கு பேர் அடங்கிய குடும்பம் ஒன்று வெள்ளவத்தை பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள ஆடம்பர வீடொன்றிலேயே தங்கியிருந்துள்ளனர். பெரும்பான்மை இனத்தவருக்கு உரிமையான இவ்வீடு 20 ஆயிரம் ரூபாவுக்கு வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. இவ்வீட்டிற்கு கடந்த மார்ச் மாதத்தில் கொழும்பில் சிகிச்சை பெறுவதற்கென இருவர் வந்துள்ளனர். பின்னர் அவ்விருவரும் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment