Tuesday, October 28, 2008

கந்தசஷ்டி விரதம் நாளை ஆரம்பம்.



இந்துக்களினால் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் ஒன்றான கந்தஷஷ்டி விரதம் நாளை புதன் கிழமை (29.10.2008) ஆரம்பமாகி 6ஆம் திகதி வியாழக்கிழமை வைரவர் சாந்தியுடன் நிறைவுபெறும். வவுனியா கந்தசுவாமி கோவிலில் விரதம் அனுஷ்டிப்பவர்களுடைய நலன் கருதி விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 7ஆம் நாள் சூரன் போரும், மறுநாள் திருக்களியாண வைபவமும் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. விழாக்காலங்களில் தினமும் காலை 9 மணிக்கு விசேட அபிசேகம், பகல் பூசை நடைபெற்று சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் வரும் முதலாம் 7ஆம் நாட்கள் காலை 8 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி சண்முகப் பெருமானுக்கு விசேட அபிசேக அர்ச்சனையும் நடைபெறும் என ஆலய தர்ம கர்த்தா அறிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com