இராணுவத்தின் உளவுப்பிரிவு அதிகாரி என்று கூறி யுவதிகளிடம் கொள்ளையிட்டவர் கைது.
இராணுவத்தின் உளவுப்பிரிவில் கடமைபுரிவதாக நடித்து கண்டி மற்றும் கண்டியை அண்டிய பிரதேசங்களில் யுவதிகளை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை சூறையாடி வந்த நபரொருவரை ராணுவத்தின் உளவுப்பிரிவு மடக்கிப்பிடித்து கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளது. மீரிகம மற்றும் வஹகோட்டே எனும் பிரதேசங்களுக்கான நிரந்தர வதிவிட முகவரியுடன் இருவேறு ஆவணங்களுடன் இவர் நடமாடித் திரிந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. கைதாகியுள்ள மேற்படி சந்தேக நபர் கண்டி பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரை ஏமாற்றி 3 இலட்சம் ரூபா பணமும், தங்க ஆபரணங்களும் சூறையாடியுள்ளதுடன் கசலக்க பிரதேசத்திலுள்ள யுவதியொருவரை ஏமாற்றி 90,000 ரூபா பணத்தையும் சூறையாடியுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் கண்டி பொலிஸ் பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுரத்த பண்டார தலைமையில் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெறுகின்றது.
0 comments :
Post a Comment