இரத்தினபுரியில் பெருமளவான தொழிலாளர்கள் சுத்திகரிக்கப்படாத குடிநீரையே பயன்படுத்துகின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 50 சதவீதமான தோட்டத் தொழிலாளர்கள் சுத்திகரிக்கப்படாத நீரையே பருகி வருகின்றனர். இதனால் இவர்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கும் ஆளாகி வருகின்றனர். மழைக்காலம் என்பதால் இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. இதேவேளை, இந்தக் குடிநீரில் மிருகங்களினதும், மனித மல எச்சங்களும் காணப்படுவதாக அவ்வப்போது கூறப்பட்டு வந்துள்ள போதும் இதுகுறித்து எவரும் கவனம் செலுத்துவதில்லையென்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது. பெருந்தோட்டப் பகுதிகளுக்கு சமுர்த்தி, மற்றும் ட்வரஸ்ட் நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களே குடிநீர் வசதிகளை இம்மக்களுக்காக ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றன. இருந்த போதிலும் இந்த நிறுவனங்கள் இந்த நீர் மனித பாவனைக்கு உகந்ததா என்பது தொடர்பாக இதுவரை பரிசோதனைக்குட்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment