Sunday, October 19, 2008
இலங்கை தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் தமிழக மீனவ அமைப்பை சேர்ந்த நூறுபேர் கைது
தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திவரும் இலங்கை கடற்படையினரை கண்டித்து இலங்கைத் தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற மீனவ அமைப்பை சேர்ந்த 100 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து இந்திய- இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள கடற்ப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் 300 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இலங்கை அரசைக்கண்டித்து தமிழக மீனவர் முன்னேற்ற சங்கம, தென் இந்திய மீனவர் நலச்சங்கம் மற்றும் மீனவ அமைப்புக்கள் ஒன்று திரண்டு மீனவ போராட்ட குழு என்ற அமைப்பை தோற்றுவித்துள்ளனர். இதன் பேரில் இலங்கைத் தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள இலங்கைத் தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த ஊர்வலமாக வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த மயிலாப்பூர் துணைக்கமிஷனர் மௌரியா தலைமையிலான பொலிஸார் மீனவர்களை கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment