கால்நடை உத்தியோகத்தர்களை ஊக்குவிக்க கெயார் உதவி.
அம்பாறை மாவட்டத்திலுள்ள கால்நடை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கான வாழ்வாதார அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டும் கெயார் எனும் சர்வதேச நிறுவனம் பல செயல்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றது. இதன் முதல் கட்டமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சவளக்கடை கிராமத்தில் நடமாடும் கால்நடை வைத்திய சிகிச்சை முகாமொன்று அண்மையில் நடத்தப்பட்டது. கால்நடை வைத்தியர்களின் பங்களிப்போடு இடம்பெற்ற வைத்திய சிகிச்சை முகாமில் இப்பிரதேசத்தில் ஆடு, மாடு, மற்றும் கோழி வளர்ப்பில் ஈடுபட்டுவரும் பல கிராமவாசிகளும் பலனடைந்தனர். சுமார் 120 க்கும் மேற்பட்ட கால்நடை உற்பத்தியாளர்கள் கலந்து கொண்ட மேற்படி வைத்திய முகாமில் கெயார் நிறுவனத்தின் அம்பாறை பிராந்திய வாழ்வாதார குழுத் தலைவர் கே.ஜெயபாலன் திட்டக்கண்காணிப்பாளர் கிரோசன் கனகரத்தினம் நாவிதன் வெளி கால்நடை உற்பத்தி அபிவிருத்தி வைத்திய அதிகாரி டாக்டர். உதயராணி குகேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment