Saturday, October 18, 2008
மூதூர் சேனையூரிலிருந்து இடம்பெயர்ந்தோர் மீண்டும் சொந்தக் கிராமங்களில் மீள் குடியமர்வு.
யுத்த சூழ்நிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சேனையூர் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலயங்களில் தங்கியிருந்த 71 குடும்பங்களைச் சேர்ந்த 226 பேர் நேற்று முன்தினம் 16ம் திகதி அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை வடக்கு, செங்கலடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள நலன்புரி நிலயங்களில் தங்கியிருந்த இக்குடும்பங்கள் 7 பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பனர்வாழ்வு புனரமைப்பு உதவி திட்டப் பணிப்பாளர் ஏ.எல்.எம் ஷரீப் தெரிவித்தார். மீளக்குடியமர்த்தப்பட்ட இவர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment