தொலைபேசிக் கம்பிகளை வெட்டி அவற்றை உருக்கி பித்தளைப் பொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை கடுகண்ணாவைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான கம்பிகளைத் திருடிய நபரை கடுகண்ணாவை பொலிஸார் கையும் மெய்யுமாக கம்பிகளுடன் பிடித்துள்ளனர். கடுகண்ணாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகார் சந்தேக நபரை கண்டி மாஜிஸ்திரேட்
சுமுது பிரேம சந்திர முன்னிலையில் ஆஜர் செய்ததையடுத்து, மாஜிஸ்திரேட் இவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment