Saturday, October 4, 2008

வடக்கு மாணவர்களுக்கு வழமானதொரு எதிர்காலத்தை அரசு உருவாக்கும் - ஜனாதிபதி

மூன்று தசாப்தங்களாக எமது நாட்டில் இடம்பெற்றுவரும் இனநெருக்கடிக்கு முடிவு கண்டு வடமாகான மாணவர்களுக்கு வழமான எதிர்காலத்தை விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றவென கொழும்புக்கு வருகை தந்திருக்கும் வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களை கடந்த வியாழக்கிழமை பிற்பகல் அலரிமாளிகையில் வைத்து சந்தித்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். முன்னொரு காலத்தில் வடக்கு மாகானத்திலிருந்து பல விளையாட்டு வீர வீராங்கணைகள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி இருந்த போதிலும் பின்னர் ஏற்பட்ட பயங்கரவாதச் சூழ்நிலையினால் அவர்களாள் விளையாட்டுத்துறையில் தேசிய மட்டத்தில் மிளிர முடியாமல் போனது துரதிஷ்டமே. வடக்கு மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த அரசு பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் அளவுக்கு வடக்கில் மிகத்திறமை வாய்ந்த வீர வீராங்கணைகள் இருப்பதனை நான் நன்கறிவேன். அத்தகையதொரு வாய்ப்பைக் கூட அவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு எனது அரசு தயாராகவே உள்ளது என்றார்.

No comments:

Post a Comment