Friday, October 24, 2008

ஜனாதிபதி - இனியபாரதி சந்திப்பு



அம்பாறை மாவட்ட ஜனாதிபதிக்கான இணைப்பாளரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தருமாகிய இனியபாரதி இன்று நண்பகல் ஜனாதிபதி அவர்களை சந்தித்து மாவட்ட நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின் போது பாரதியினால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளுக்கான தீர்வுகள் உடன் வழங்கப்பட்டதாகவும் அம்பாறை மாவட்டத்தில் யுத்தகாரணமாக விதவைகளாக்கப்பட்ட 1000 பெண்களுக்கு சுயதொழில் மேற்கொள்ளும் முகமாக தையல் இயந்திரங்களை வழங்குவதற்கான நிதியை ஜனாதிபதி நிதியத்தில் இருந்து ஒதுக்கியதுடன் பிரதேசத்தில் வேலைவாய்பற்ற 500 இளைஞர்கட்கு வாகனச்சாரதி பத்திங்களை பெற்றுக்கொடுக்கு முகமாக அதற்கான பயிற்சி நெறிகளுக்கான உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகட்கு வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி காரியாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com