கிளிநொச்சி ஓமந்தை பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட புலிகள் இயகக்கத்தினரின் மூன்று சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் ஊடாக புலிகள் இயக்கத்தினரிடம் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் அலுவலக அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். கிளிநொச்சி வெலிஓயா பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல்களின் பின்னர் பாதுகாப்பு படையினர்
மேற்கொண்ட தேடுதல்களின் போது இம் மூன்று சடலங்களும் கைப்பற்றப் பட்டதாகவும் அவர் கூறினார். ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் இச்சடலங்களை எடுத்துச் சென்று புலிகள் இயக்கத்தினரிடம் ஒப்படைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment