உடல் ஊனமுற்றோர் தொகை கிழக்கில் அதிகரிப்பு.
கிழக்கு மாகாணத்தில் கடந்த 25 வருடங்களுக்குள் உடல் ஊனமுற்றவர்களின் தொகை பெரிதும் அதிகரித்து காணப்படுவதாக சமுகப்பணியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பலர் தற்போது உடல் ஊனமுற்ற நிலையில் தமது அன்றாட வாழ்க்கையினை கொண்டு நடத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலம் கிழக்கில் நிலவிய கோர யுத்தத்தினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சண்டைக்குள் சிக்கியும், கண்ணிவெடிகளில் அகப்பட்டும்
பலர் கை, கால்களை இழந்துள்ளனர். பலரது கண்ணும் பறிபோயுள்ளது. இதேநிலை தொடரும் பட்சத்தில் இன்னும் சில வருடங்களில் இலங்கையில் இருபது இலட்சம் பேர் ஊனமுற்றவர்களாக இருப்பார்கள் என இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவி பேராசிரியை லலிதா மென்டிஷ் தெரிவித்துள்ளார். அரசாங்கமும் அரச சார்பற்ற அமைப்புகளும் உடல் ஊனமுற்றவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கு பல்வேறு உதவிகளை செய்தல் வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment