Wednesday, October 8, 2008
ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதிவான் உத்தரவு.
நீர்கொழும்பு பாடசாலை மானவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் ஆஜர்செய்யப்பட்ட ஆசிரியரை நீர்கொழும்பு பிரதான நீதிவான் டூயகீத அல்விஸ் எதிர்வரும் 20.ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். சந்தேக நபரான ஆசிரியர் நீர்கொழும்பு நகரின் வர்த்தக பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல சர்வதேச ஆங்கிலப் பாடசாலையில் ஆங்கிலம் மற்றும் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றுபவராவர். பாதிக்கப்பட்ட மானவர்கள் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் மேற்படி ஆசிரியர் கடந்த வெள்ளிக் கிழமை பொலிஸாரால் கைது செய்யப் பட்டிருந்தார். நேற்று முன்தினம் நீர் கொழும்பு பிரதான நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார். ஆசிரியரால் பாதிக்கப் பட்ட மானவர்கள் தொடர்பான வைத்திய அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் சந்தேக நபரால் இன்னும் பல மானவர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்து வருவதாகவும் அது தொடர்பாக விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் நீதி மன்றில் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment