Wednesday, October 29, 2008

அரசியல் வாதிகளால் அல்ல அனைத்து மக்களிடையே ஐக்கியம் வலுவடைவதனாலேயே அபிவிருத்தி காணலாம். ஏறாவூரில்-முதல்வர் சந்திரகாந்தன்



இன்று (28.10.2008) செங்கலடி, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற திறப்புவிழா நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே முதலமைச்சர் சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைமையக கடடிடம் இன்று காலை 09.00 மணியளவில் முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய மௌலவி இப்ராகிம் காதி பாரிய சவால்களுக்குமத்தியில் இன மத பேதமின்றி சேவையாற்றிவரும் முதலமைச்சர் நீடூழி வாழவேண்டுமென வாழ்த்தினார்.

உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவரான அகில் அர்சாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செங்கலடிப்பிரதேச தவிசாளர் (ருத்திரா) ஜீவரங்கன்இ இனநல்லுறவு பணிப்பாளர் எம்.ஆர்.ஸ்ராலின் போன்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேற்படி அமைப்பு 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும் கிழக்கில் இடம்பெற்ற யுத்த சூழல் காரணமாக சில ஆண்டுகளாக செயலிழந்து காணப்பட்டது எனினும் முதலமைச்சர் சந்திரகாந்தனின் வரவே தம்போன்றவர்களை தட்டி கொடுத்து செயற்படவைக்கின்றது என்று அமைப்பின் தலைவரான அகில் அர்சாத் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com