Sunday, October 19, 2008

வடக்கு உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த விரைவில் திருத்தச் சட்டம்

வடக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தும் விதத்தில் உள்ளுராட்சி தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட இருப்பதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். இதற்கான சட்ட மூல நகல் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் வடக்கில் யாழ்ப்பாண மாநகர சபை உட்பட முப்பத்தி மூன்று உள்ளுராட்சி சபைகள் உள்ளன இந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விரும்புவதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com