Tuesday, October 7, 2008
தடை தாண்டி உன் பணி மேலோங்க வாழ்த்துகின்றோம்!
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன் சமுகத்தின் விடுதலைக்காய், அவர்களின் நல்வாழ்விற்காய் தன்னால் இயன்றளவு பயனுள்ளவனாய் வாழும் போதே அவன் ஒரு சிறந்த மனிதனாக உலகத்தால் கணிக்கப்படுகின்றான்.
அந்தவகையில் ஈழம் பெற்பெற்றெடுத்த ஈடற்ற பல புதல்வர்களின் மத்தியில் விநாயாகமூர்த்தி முரளிதரனும் தன் இன விடுதலைக்கான போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பல போராட்டங்களின் நாயகனாய் திகழ்ந்து, பின்னர் ஆயதப் போராட்டத்தால் மட்டுமே மக்களின் அவலங்களை அகற்ற முடியாது என்ற உண்மையை உணர்ந்து ஜனநாயகப் பாதையில் தன் பணியைத் தொடர்ந்தார். இப் பயணத்தில் பல கற்களும் முட்களும் கால்களை இடறிய போதும் அவற்றைப் பக்குவமாய் அகற்றி இன்று பாராளுமன்ற வாசலை எட்டி இருக்கின்றார்.
இந்த நாளை மக்கள் தம் விடியும் வேளைக்கான ஓர் விடிவெள்ளியாகக் கண்டு பூரித்து நிற்கின்றனர். தன் திறமை மிக்க சேவைகளினூடாக நல்லதொரு எதிர்காலத்தை மக்களுக்காக கட்டியெழுப்புவார், கட்டியெழுப்பவேண்டும்! அதற்கு இந்த சத்தியப்பிரமாணம் ஓர் அத்திவாரமாய் விளங்கும் என்ற நம்பிக்கையோடு தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளினூடான மக்கள் முன்னேற்றப்பணி தொடர தமிழ் மக்கள் சார்பில் இலங்கைநெற் இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்களைக் கூறி அவரின் அரசியல் பிரவேசத்தை இறை ஆசி வேண்டி வரவேற்கின்றது.
நிர்வாகம் - இலங்கைநெற்
No comments:
Post a Comment