Monday, October 13, 2008

சங்கரி சித்தார்தன் சுகு ஆகியோர் தமிழ் நாடு மீது சீறிப்பாச்சல்!



தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு. ஆனந்தசங்கரி தலமைதாங்குகின்ற தமிழ் ஜனநாயகக் கூட்டமைப்பின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் சித்தார்த்தன் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (நாபா அணி) தலைவர் சிறிதரன் அகியோர் இந்திய அரசியல்வாதிகளின் இன்றைய போக்கை மிகவும் சாடியுள்ளனர்.

நேற்றைய ஆங்கில் வார ஏடு ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள திரு. ஆனந்தசங்கரி அவர்கள் இந்திய அரசியல் வாதிகள் இலங்கை விடயத்தில் மிகவும் பொறுப்புணர்சியுள்ளவர்களாக செயல்பட வேண்டும் என்றும் இன்றைய வன்னி நிலைமைகள் பற்றி புலிகள் உலகிற்கு பொய்யான பிரச்சாரங்களை எடுத்துரைத்து வரும் அதே தருணத்தில் அங்கு நடைபெறுகின்ற அனைத்து மனித அவலங்களுக்கும் அவ்வியக்கமே பொறுப்பெனவும் சாடியுள்ளார்.

திரு. சித்தார்த்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் வன்னியிலே இடர்பாடுகளினுள் அகப்பட்டு தவிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர முடியாதவாறு இரும்புக் கரம் கொண்டு தடுத்து வைத்திருக்கும் புலிகள் அங்குள்ள மக்களுக்கு உண்ண உணவும் மருந்து வகைகளும் இல்லை என முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். எனவே தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் புலிகளின் பொய்பிரச்சாரங்களை நம்பும் விடயத்தில் இருந்து விடுபட்டு புலிகள் மக்களை மேலும் அவலங்களுக்குள் தள்ள கூடயது என பலத்த அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment