எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள சகல பரீட்சாத்திகளுக்கும் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. எதிரிசிங்க தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் நேரகாலத்துடன் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அவற்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு அவர் அதிபர்களுக்கு அறிவித்துள்ளார். இதேநேரம் ஆட்பதிவுத் திணைக்களம் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை துரித கதியில் வழங்கப்படுகிறதா என்பதை மேற்பார்வை செய்து வருகின்றது.
No comments:
Post a Comment