Thursday, October 16, 2008

ஹெரோய்ன் வைத்திருந்ததாக கைதானவர் காலி பொலிஸ் நிலையத்தில் மரணம்.



20 கிராம் ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் காலி பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்றுக் காலை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலி மலித்தவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான அத்துல் ரஹீம் மொஹமட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் காலி பிராந்திய மோசடித் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை அண்மைக்காலமாக பொலிஸ் நிலையங்களில் கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் வழமையாகி வருவதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாருக்கு எதிராக இலஞ்ச ஊழல் குற்றம் சுமத்திய ஒருவர் நீர்கொழும்பில் இனந்தெரியாதோரினால் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தியை வெளியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com