வெலிஓயா கஜபாபுரம் பகுதியை படையினர் நேற்றுமாலை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருப்பதாக ராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். புலிகளுக்கும் படையினருக்குமிடையே கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற கடும் மோதலின் விளைவாகவே கஜபாபுரத்தை நேற்று மாலை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடிந்ததாக பிரிக்கேடியர் தெரிவித்திருந்தார். மோதல்களின் விளைவாக புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதாக
கூறிய பிரிகேடியர் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் பலர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment