Saturday, October 18, 2008
ஜெனரல் ஜானக பெரேரா உட்பட மூவரின் வெற்றிடங்களுக்கு புதிய உறுப்பினர்கள்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற தற்க்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் வடமத்திய மாகாண எதிர்கட்சி தலைவர் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் மூவரின் வெற்றிடங்களுக்கு அடுத்து வரும் சில தினங்களுள் புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெற்ற வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா ஒரு இலட்சத்து 16, 430 விருப்பு வாக்குகளையும் சுனில் திசாநாயக்க 22, 971 விருப்பு வாக்குகளையும் எம்.எச் அனுர்தீன் 14, 013 விருப்பு வாக்குகளையும். பெற்று வெற்றீயீட்டியிருந்தனர். தாக்குதலால் கொல்லப்பட்ட இவர்கள் மூவரினதும் இடத்துக்கு கே.பீ.தென்னக்கோண் 13,058 விருப்பு வாக்குகள், ரோகண கமகே 12,769விருப்பு வாக்குகள், அநுர குணசேகர 12, 357 விருப்பு வாக்குகள் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரினால் இவர்கள் மூவரினதும் பெயர்கள் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பப் பட்டிருப்பதாகவும் வெகு விரைவில் இவர்கள் மூவரும் மாகாண சபை உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
No comments:
Post a Comment