Sunday, October 19, 2008
யாழ்.குடாநாட்டில் மின்தாக்கி மூவர் உயிரிழப்பு.
யாழ்.குடாநாட்டில் கடந்த ஒரு வாரத்திற்குள் மின்தாக்குதல்களுக்கு இலக்காகி மூவர் உயிரிழந்துள்ளனர். பருவ மழை பலமாக பெய்கின்ற போது வீடுகளின் மின் ஒழுக்குகளினால் மின் தாக்குதல்களுக்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தனது வீட்டிற்கான மின் இணைப்புக்களை மேற்கொண்டிருந்த வேளை மின்தாக்குதலுக்கு இலக்காகி கொய்யாத்தோட்டப் பகுதியைச் சேர்ந்த அன்னரெத்தினம் ஸ்ரீபன் வயது 28 என்பவர் உயிரிழந்துள்ளார். கடந்த 14ஆம் திகதி பருத்தித்துறை திக்கம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை அதிபர் வே.விநாயகமூர்த்தி 16ஆம் திகதி யாழ் குப்பிளானைச் சேர்ந்த 4 வயதுச் சிறுவன் அ.அருள் ஆகியோர் மின்தாக்குதல்களுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர். அத்தோடு கடந்த 17ஆம் திகதி தொல்புரம் கிழக்கைச் சேர்ந்த த.விஜிதரன் வயது 23 என்பவர் மின்தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். மழைக் காலப்பகுதியில் மின் இணைப்புக்களையோ அல்லது மின்சாரத்துடனோ அவதானமாக இருந்து செயற்படுமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment