Friday, October 10, 2008

வீதிகள் ஒடுக்கமாக இருப்பதால் சாய்ந்த மருது மக்கள் சிரமம்.



சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் நிர்மானிக்கப் பட்டிருக்கம் வீதிகள் ஒடுக்கமாய் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தெருக்களினால் போக்குவரத்து செய்வதில் பல்வேறு சிரமங்களும் அசௌகரியங்களும் தோன்றியிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்ட இவ்வீதிகளில் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக எவ்வித திருத்த வேலைகளும் மேற்கொள்ளப் படவில்லை. காலப் போக்கில் பொது மக்களால் வீடுகள் கடைகள் மற்றும் சுற்று மதில்கள் போன்றவைகள் நிர்மானிக்கப்பட்ட போது மேலும் இவ் வீதிகள் ஒடுங்கி விட்டது. இதனால் கனரக, சாதாரன மற்றும் முச்சக்கர வண்டிகளின் போக்குவரத்துக்கு இடஞ்சலாகவும் தாமதங்களும் பணவிரையங்களும் ஏற்படுவதாக வாகன சொந்தக்காரர் தெரிவிக்கின்றனர். மேற்குறித்த செயலகப் பிரிவிலுள்ள அறவி பாஷா வீதி, பழய மார்க்ட் வீதி, மாவடி வீதி, பீசாம் மக்காமடி வீதி, பழய தபால் கந்தோர் வீதி மற்றும் ஜீ.எம்.எம்.எஸ் வீதி ஆகிய வீதிகளுக்கே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது

No comments:

Post a Comment