இலங்கைத் துணைத் தூதரகத்தை தாக்கும் முயற்சி முறியடிப்பு.
சென்னையிலுள்ள இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தை தாக்குவதற்கு குழுவொன்று முயன்றதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று (23.10.2008) பிற்பகல் மூன்று மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கட்டுக்கடங்காத குழுவொன்று தூதரகத்தின் பாதுகாப்பு நிலையை உடைத்துக் கொண்டு தூதரகத்தினுள் பிரவேசிக்க முற்பட்டது. அதேநேரம் கற்களையும் வீசியதில் தூதரக அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். நிலைமை இந்திய
அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதித் தூதுவருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment