மட்டு வறிய குடும்பங்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த திட்டம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென தேச நிர்மான உட்கட்டமைப்பு அமைச்சும் சமுர்தி அதிகார சபையும் தேவையான நிதியினை வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த நாற்பது குடும்பப் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் வைபவம் அண்மையில் நடைபெற்றது. ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் சமுர்த்தி முகாமையாளர். ஏ.எம். அலி அக்பர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதேச செயலர் எஸ்.எச். முஸம்மில், சமுர்த்தி அதிகார சபையின் மாவட்ட இணைப்பு பணிப்பாளர் எம். நடேசராஜா மற்றும் உதவி ஆணையாளர் பீ. குணரத்தினம் ஆகியோரும் கலந்து கொண்டனர். குளிர்சாதனப் பெட்டி, தையல் இயந்திரங்கள் மற்றும் பன்அரைக்கும் பருத்திமனை என்பனவும் கையளிக்கப்பட்டன
0 comments :
Post a Comment