Saturday, October 4, 2008

படுவான் கரையில் சிறுவர் தின நிகழ்வுகள்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் பல் வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. பிரதேசத்தின் 38 கிராமங்களின் சிறுவர் கழகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த சிறுவர் கண்காட்சி கோயில் போரதீவு விவேகானந்தா வித்தியாலயத்தில் நடைபெற்றது. சிறுவர் இணையத் தலைவர் யோ. ரெனிஸ்காந்தன் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வின் பிரதம அதிதயாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதய சிறிதரும் சிறப்பு அதிதியாக போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வீ. ஆர். மகேந்திரனும் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச். டபிள்யு. கே. ஜயந்தவும் கலந்துகொண்டனர். அரச சார்பற்ற நிறுவனமான பீ.பீ.டீ.ஆர்.ஓ வினால் அனுசாரணை வழங்கப்பட்ட இக்கண்காட்சியை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment