Friday, October 10, 2008

பருத்தித்துறை பகுதியில் கசிப்பு விற்றோர் கைது!



பருத்தித்துறை மதுவரிப் பரிசோதகர்களின் திடீர் சோதனைக் குழவினரிடம் அகப்பட்டுக்கொண்ட நான்கு கசிப்பு விற்பனையாளர்களுக்கும் பருத்தித்துறை நீதிமன்றம் 200.000 ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது. அபராதப் பணத்தைச் செலுத்தத் தவறினால் 6 மாத சிறைத்தண்டனையை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. குடத்தனை வேம்படி கிராமங்களைச் சேர்ந்த நால்வரையும் மதுவரிப் பரிசோதகர்கள் பருத்தித் துறை நீதிமன்றத்தில் நீதிபதி கே. அரியநாயகம் முன்னிலையில் ஆஜர் செய்த போது அனைவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com