சிறுவர்களின் பால்மா, உணவு வகைகள் இரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் - கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு.
நாட்டில் சிறுவர்களுக்கான சகல பால்மா வகைகளையும், உணவு வகைகளையும் சிறுவர்கள் உண்பதற்கு உகந்தவையா என்பது குறித்து இரசாயன பரிசோதனை நடத்தி அதன் அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவற்றின் மாதிரிகளை சிங்கப்பூரிலுள்ள உணவு, மற்றும் ஒளடத கட்டுப்பாட்டு குழுவுக்கு அனுப்பி இரசாயன பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மேல்நீதிமன்ற
நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகளில் சட்டமா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் பங்களிப்பும் பெறப்படவேண்டும் எனவும், இந்தச் செயற்பாடுகளின் போது எவரும் அதற்குத் தடையாக செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நீதிபதி மேலும் எச்சரித்துள்ளார்.
0 comments :
Post a Comment