Wednesday, October 22, 2008

புலிகளின் இணையத்தளங்களில் வெளியான செய்தியை ரிஎம்விபி யினர் மறுத்துள்ளனர்.




கிழக்கில் அமைதி நிலையை குழப்ப புலிகள் தமது கூலிப்படையை வைத்து அப்பாவி மக்களை கொலை செய்துவிட்டு நிதர்சனம் புதினம், போன்ற புலிகளின் இணையத்தளங்களில் ரி.எம்.வி.பி யை குற்றஞ்சாட்டி வெளியான செய்தியை வன்மையாக கண்டிக்கின்றோம் என அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது.

கிழக்கில் ஜனநாயகம் உதயமாகி அமைதியான சூழலில் வாழும் மக்களை குழுப்பும் நோக்குடனே புலிப் பயங்கரவாதிகள் செயற்படுகின்றனர். நேற்று மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பகுதியில் மூன்று சிங்கள இளைஞர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டமையை புலிகளின் கோழைச் செயலாகவே நாம் கருதுகின்றோம். கிழக்கில் முழுமையாகத் தோல்வியுற்ற பயங்கரவாதிகள் வடக்கிலும் தோல்வியின் வழிம்பில் நிற்கும் இவ்வேளையில், கிழக்கில் தமது கூலிப்படைகளை வைத்து தமிழ், முஸ்லிம், சிங்களம் என வேறுபாடில்லாது அப்பாவி மக்களை கொலை செய்தும், அங்குள்ள மக்களின் சொத்துக்களை சூறையாடியும் வருவதுடன் இற்றிற்கான பழியை அரச படையினர் மீதும் கிழக்கில் ஓர் பலம் வாய்ந்த அரசியல் கட்சியாக இருக்கும் ரிஎம்விபி மீதும் சுமத்தி வருவதை யாவரும் அறிவீர்கள். கிழக்கு மக்கள் இலங்கை அரசு மீதும் ரிஎம்வீபி மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர் குலைக்கும் நோக்கடனே புலிப்பயங்கரவாதிகளின் இணையத்தளமும் செயற்படுகின்றன. இதன் ஒருபகுதியாகவே நேற்று மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலை பகுதியில் சிங்கள இளைஞர்களின் கொலையை ரிஎம்வீபி கட்சி மீது சாட்டி புலிப்பயங்கரவாதி பொட்டனின் இணையத்தளமான நிதர்சனத்தில் வெளியாகியிருந்தது.

ஏன குறிப்பிட்டிருந்ததுடன் புலிகளின் இக் கோழைத்தனமான செயலை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com