மாணவர்களின் உரிமையைப் பறிக்க எத்தரப்பிற்கும் இடமளிக்க முடியாது.
வடக்கு, கிழக்கு, மலையகம் என நாட்டின் சகல பிரதேச மாணவர்களினதும் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புக்களைக் செய்துள்ளது. எந்தப்பிரிவினருக்கும் மாணவர்களின் உரிமையைப் பறித்தெடுப்பதற்கு இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். விரும்பியோ, விரும்பாமலோ இளைய சமுதாயம் ஆயுதம் ஏந்தியுள்ள நிலைமையை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். தமிழ், சிங்கள, இஸ்லாம் என சகல மாணவர்களும் எமது பிள்ளைகள் என்பதற்கிணங்க சகலரும் அனைத்து உரிமைகளையும் சுதந்திரமாக பெற்று அனுபவிக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். "தேசத்துக்கு மகுடம்" (தெயட கிருள) அபிவிருத்திக் கண்காட்சியையொட்டி நாடளாவிய பாடசாலைகளுக்கிடையில் கல்வியமைச்சு நடாத்திய கட்டுரை, சித்திரம் வரைதல், பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கும் 2007 க.பொ.த உயர்தரப்பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிப்பதற்குமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிரதிக் கல்வியமைச்சர் எம். சச்சிதானந்தம், நிதி, திட்டமிடல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment