Friday, October 10, 2008

ஜானக பெரேராவை தாக்கிய குண்டுதாரியை அடையாளம் கண்டிருப்பதாக பொலிஸார் தெரிவிப்பு.



மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடாத்திய குண்டுதாரியை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட் கிழமை காலை அநுராதபுரத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகத் திறப்பு விழாவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 29 பேர் கொல்லப்பட்டதுடன் 86பேர் படுகாயமடைந்திருந்தனர். இத்தாக்குதலில் திறப்பு விழாவை வீடியோ படமெடுத்துக் கொண்டிருந்த சிரச ஊடகவியலாளர் முஹமட் ரஸ்மி மஹ்ரூப் என்பவரும் கொல்லப்பட்டார். எனினும் அவரது வீடியோ கமெரா இந்தச் சம்பவத்தில் பலத்த சேதமடையவில்லை இந்தக் கெமராவிலிருந்த ஒளிப்பதிவு நாடாவை கைப்பற்றிய பொலிஸார் அதனைத் தீவிர ஆய்வுக்குட்படுத்தினர். குண்டுத்தாக்குதலில் குண்டுதாரியின் உடல் சிதறியதுடன் தலையும் அடையாலம் காணமுடியாதளவுக்கு சேதமடைந்துள்ளது. எனினும் வீடியோ ஒளிப்பதிவை ஆராய்ந்த போது குண்டுதாரி எனக் கருதப்படுவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காயமடைந்து ஆஸ்பத்திரியிலிருப்போரின் வாக்கு மூலத்தின்படி அது உறுதியாகியுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயந்த கமகே தெரிவித்தார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com