திருக்கோவிலில் பெரும் போகச் செய்கைக்கான ஏர்பூட்டு விழா.
நாம் பயிரிடுவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம். வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் இம்முறை பெரும்போக விவசாயத்திற்கான உத்தியோக பூர்வ ஏர்பூட்டு விழா திருக்கோவில் பிரதேசத்திலுள்ள பெரும்போகச் செய்கைக்கான வயற் பிரதேசத்தில் நடைபெற்றது. மாவட்டத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் பாதுகாப்பின்மை போன்ற காரணிகளால் செய்கை பண்ணப்படாமல் கைவிடப்பட்டிருந்த சுமார் 9900 ஏக்கர் காணிகள் உலக உணவுத் திட்டத்தின் அனுசரணையுடன் இவ்வருடம் விவசாயச் செய்கைக்கு உட்படுத்தப் படவுள்ளன. சமய அனுஷ்டானங்களுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி அமைச்சர் துரையப்பா. நவரெத்தினராஜாவும் விசேட அதிதியாக அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பதிகாரி இனிய பாரதியும் உலக உணவு ஸ்தாபன அதிகாரிகளும் விவசாய திணைக்கள உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment