அம்பாறை மாவட்டத்தில் மேட்டு நிலக் காணியில் உப உணவுப் பயிர்ச் செய்கை
அம்பாறை மாவட்டத்தில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் மேட்டு நிலக் காணிகளில் உப உணவுப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு விவசாயத் தினைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்படி திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் 5200 ஏக்கரில் மரவெள்ளிச் செய்கையும் 6000 ஏக்கரில் சோளச் செய்கையும் 3000 ஏக்கரில் நிலக் கடலைச் செய்கையும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட விவசாய உதவி பணிப்பாளர் நிமால் தயாரட்ன தெரிவித்தார். இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் உள்ள மேட்டு நிலக் காணிகள் பொத்துவில் திருக்கோவில் ஆலையடிவேம்பு நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே கூடுதலாக காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment