Friday, October 24, 2008

கிழக்கு மக்களின் ஒன்றுபட்ட பலத்துடன் ஜனநாயக வழிநோக்கி எமது கிழக்கு தலைமைத்துவத்தின் பயணம்.



எம் இனத்தின் உரிமைகள் மறுக்கப்பட்டு எமது சுந்திரங்கள் விலங்கிடப்பட்டு எம்மண் ஆக்கிரமிக்கப்பட்டு இனச் சுத்திகரிப்பும் குடியேற்றமும் நாளுக்கு நாள் அதிகரித்து எமது பாரம்பரிய உடைமைகள் அழித்தொழிக்கப்படும் நிலையை சிந்திக்கத் தலைப்பட்ட எம் கிழக்கின் தலைவன் அன்று போர் முனையில் வேங்கையாய் நின்றபோதும் இன்று ஜனநாயகப் பாதை நோக்கிய பயணத்தின்போதும் தன் இனத்தின் தன்மானத்தை விலைபோகவிடாது
தன்மானத் தமிழன் ஜனநாயக வழியிலும் தலைவணங்காதவன் என்று எம்மினத்தின் பெருமையை உலகுக்கு பறைசாற்றியுள்ளார்.

அன்று விருகாவியத்தின் கதாநாயகனாக வீற்றிருந்த எமது கிழக்கின் தலைவன் தொடர்ச்சியாக கிழக்கு மண்ணை அலங்கரிக்கத் துடித்த அகோரை போதை வரம்பிட வைத்து எம்மையும் எமது தேசத்தையும் ஒளிபொருந்திய அபிவிருத்திப் பாதையில் இழுத்துச் செல்வதற்காக தனது துல்லியமான சிந்தனைகளை ஜனநாயக நீரோட்டத்தில் பதித்துள்ளார்.

கடந்த பல தசாப்தகாலங்களாக இடம்பெற்ற அகோர போரின் வடுக்களினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் எமது தமிழ் உறவுகளின் வாழ்வாதாரம் அடியோடு வலுவிழந்து கல்வி, பொருளாதார சமூகப் பண்பாட்டம்சங்கள் சிதறடிக்கப்பட்டு சோர்ந்து வாழும் எமது சமூகத்தின் விடிவுக்கான இன்றைய காலத்தின் கட்டாய தேவையாக எமது கிழக்கின் தலைமைத்துவம் ஜனநாயக வழிப் பின்பற்றலை அவசியப்படுத்தியுள்ளமை உலகத் தமிழ் உறவுகள்
அனைத்தும் ஏகோபித்த கரகோசத்துடன் வரவேற்று நிற்கின்றன.

அம்மான் வன்னி மண்ணில் கால்பதித்தால் பூரித்த காலமும் ஒன்று உண்டு. அவர் வன்னி மண்ணைவிட்டு வெளியேறியதனால் வன்னிமண் அழுதகாலமும் ஒன்று உண்டு.

தனது சமூக அரசியல் விழிப்புணர்வு பார்வையினையும் தான் விரும்பும் இலட்சிய சமுதாய பார்வையினையும் காட்டும் கண்ணாடியாகத் தான் இவரின் ஜனநாயகவழி நோக்கிய பயணம் அமைந்திருக்கின்றது. இவர் தலைமைத்துவப் பண்புகளில் நியாய வாதியாக இருந்தமையால் விடுதலைப் போராட்டத்தில் எம் உறவுகள் தங்களை இணைத்துக் கொண்டார்கள். அம்மான் அநியாயங்களுக்கு எதிராகவும் நியாயங்களுக்காகவும் வாதிட்டார். நியாயத்தின் வாயிலாகத்
தான் தமிழ்ச் சமுகத்தின் பிரச்சினைகள் மட்டுமன்றி ஏனைய இனத்தின் பிரச்சி்னைகளையும் நோக்கினார். நியாயங்களுக்காகக் கோபப்பட்டாலும் நிறைய மனிதாபிமானத்தையும் தயாள சிந்தனையையும் தன்னகத்தே கொண்டிருந்தார். இதன் பால் அவரது சிந்தனைகளால் ஆழப்பட்ட அத்தனை போராளிகளும் இப்பண்புகளை அனுபவிக்காமல் இருந்திருக்க முடியாது. சரியெனக் கண்ட விடையங்களை உரிய வேளையில் தீர்மானித்து அமுல்படுத்தும் ஆற்றல
என்பது அவர் கொண்டிருக்கும் தலைமைத்துவப் பண்புகளில் முதன்மையானது.

பாரிய தியாகங்களோடும் சிந்தனைகளோடும் தமிழ் பேசும் சமூகத்தின் உரிமைக்காக அன்று வீறுகொண்டெழுந்து பல தசாப்தமாக எம் இனத்தின் துயர் துடைக்க போரிட்ட பெருமை உலகத் தமிழ் உறவுகளின் மனங்களில் கசிந்து கிடக்கின்றன.எரிந்து கொண்டிருக்கும் வடகிழக்குப் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காக தன்பாதங்களை ஜனநாயக வழிநோக்கிப் பதித்துள்ளார். எமது கிழக்குத தலைவரின் எதிர்பார்க்கைகளுக்கு இலக்கணம் வகுக்க வேண்டிய பொறுப்பு எமது சமுதாயத்தை சார்ந்ததாகும்.

கடந்த தசாப்தகால போராட்ட வெற்றிகளின் முழுமையான பங்காளி எம் கிழக்கின் தலைவர் அம்மான் என்பதை முழு உலகத் தமிழ் உறவும் அடையாளப்படுத்திக் கொண்டன.
இன்று கிழக்குத் தலைமைத்துவம் உரிமைக்கு குரல் கொடுக்கவும் உறவுக்கு கைகொடுக்கவும் முழுமையான நேர்த்தியான மார்க்கம் ஜனநாயகம் என்பதை அடையாளப்படுத்தியுள்ளமையை சர்வதேசம் கரகோசத்துடன் வரவேற்கின்றன.

எம் கிழக்கு மண்ணில் மீண்டும் ஒரு பாசிச கறைபடியாமல் எம்மண்ணை பாதுகாப்பது எம் சமுதாய மக்களின் பாரிய பொறுப்பாகும். எந்த ஒரு போராட்ட வரலாற்றிலும் இறுதி நிலைக்களனாய் ஜனநாயக மார்க்கமே விளங்குகின்றன. உலக நாடுகளில் ஏற்பட்ட உரிமைப் போராட்ட வரலாறுகள் இதை சான்று பகிர்ந்து நிற்கின்றமையை உணர்வு பூர்வமாக சிந்தித்த எமது தலைமைத்துவம் அகோர யுத்தத்தின் தொடர்ச்சியான இழப்புக்களை கணக்கிட்டு ஓர்
சமாதான ரீதியான ஜனநாயகப்பாதையை எமது மக்களின் உரிமைகளைப் பெற்றெடுப்பதற்கான ஓர் மைல்க்கல்லாக அடையாளப்படுத்தியுள்ளது. மறுபுறம் விதி விலக்கான வியட்னாம்யுத்தம் தற்கால உலகப்போக்குகளில் இருந்துமாறுபட்ட அம்சமாகவே எம்மால் இணங்கான வேண்டி உள்ளன.

எமது ஜனநாயகப் பின்பற்றலை உலக அரங்கில் முதன்மைப்படுத்தி எமது கடந்தகாலப் போராட்டத்தை நியாயப்படுத்தல் முதல்தர வல்லரசுகள் ஜனநாயகத்தின் பால் ஈர்க்கப்பட்டதனால் ஜனநாயகப் பின்பற்றல் தொடர்ச்சியான வெற்றிகளை அழிக்கும் என்பதில் நாம் முழுமையான நம்பிக்கையைப் பெறுகின்றோம்.

பசுமையான எமது பிரதேசத்தின் பல பகுதிகள் இன்று சுடுகாடாக காட்சியளிப்பதை மறுப்பதற்கில்லை. எனவே இந்நிலை தொடர்வதை விடுத்து எமது எதிர்கால பச்சிளம் பாலக தமிழ் உறவுகளுக்கு கேள்விக்குறியற்ற எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டிய பாரிய கடப்பாடு எமது கிழக்குத் தலைவரின் நியாயமான வீரத்தி்னைக் கண்டு வியந்த சர்வதேசம் எமது உரிமைப் போராட்டத்தின் அவசியத்தை ஆணித்தரமாக ஏற்றுக்கொண்ட ஓர்காலமும் உண்டு.

ஓர் தமிழன் இருக்கும் வரைக்கும் ஓயாது உரிமை யுத்தம் என்ற அன்று உலகுக்குப் பறைசாற்றிய பிரபாகரனின் வாசகம் வடகிழக்கு தமிழ் உறவுகளை அநியாயத்தினூடாக அழித்தொழிப்பதே தனது அடிமனதில் பதிந்து கிடக்கும் உண்மை என்பதை உணர்வுபூர்வமாக எமது கிழக்குத் தலைமை சிந்திக்கத் தலைப்பட்ட வேளையிலே மாண்டு மடிந்த மாவீரர்கள் பாசிச வெறிபிடித்த பிரபாகரனுக்கு பலிக்கடாவானவர்கள் என்பதையும் உணரத் தலைப்பட்டது.

போரிடும் வரிகளை போர்தொடுத்துப்பார்க்காத பாசிசத்தலைவன் பிரபாகரன் போராட்ட வராலாற்றில் பெருமை கூற அருகதை அற்றவர் என்பதை தீர்க்க தரிசிகளான வடகிழக்கு மக்கள் உணரத் தலைப்பட்ட வேளையில் எமது கிழக்குத் தலைமைத்துவத்தின் கைகளில் விடப்பட்டிருக்கின்றன. இதன்பால் ஜனநாயக வழிநோக்கிய பயணத்தில் தீர்க்கமான சுயநிர்ணய உரிமையை நாம் வென்றெடுக்காவிட்டால் அடுத்துவரும் எமது சந்ததியினர் எம்மை பாவிகள் என தூற்றுவார்கள்....

தொடரும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com