Monday, October 20, 2008

காப்புறுதி கூட்டுத்தாபன ஊழியர் கடத்தல். கல்முனையில் சம்பவம்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை நகர் பிரதேசம் ஒன்றில் வைத்து காப்புறுதிக் கூட்டுத்தாபன ஊழியர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளார். துறைநீலாவணை எட்டாம் பிரிவைச் சேர்ந்த சாமித்தம்பி தனராஜ் வயது 31 என்ற இளம் தமிழ் குடும்பஸ்த்தரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார். இக் கடத்தல் சம்பவம் தொடர்பில் இவரின் மனைவி திருமதி தர்ஷினி தனராஜ் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மேற்படி பிரதேசத்தில் காப்புறுதிக் கூட்டுத்தாபன கிளை ஒன்றில் கடமை புரியும் இவர் கடமைக்காகச் சென்ற வேளையில் கல்முனை நகரில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளார். இக் கடத்தல் சம்பவம் தொடர்பாக கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com