கதிர்காமத்திற்கு உல்லாசமாகக் காரில் சென்ற இரு திருமணத் தம்பதியினர் விபத்தில் சிக்கியதால் அவர்களில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே மரணமானார். மாத்தறை கதிர்காமம் வீதியில் தலல்ல என்ற இடத்தில புதன் கிழமை மாலை இடம் பெற்ற சம்பவம் குறித்து கந்தர பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். பிலியந்தலையை சேர்ந்த இவ்விரு புதுத் தம்பதியினரும் கதிர்காமக் கந்தனிடம் ஆசி பெறுவதற்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்த போதே இச் சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்சம்பவத்தில் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த புதுமணப் பெண் அந்த இடத்திலேயே மரணமானார். காரைச் செலுத்தி வந்த இப் பெண்ணின் கணவரும் பின் ஆசனத்தில் இருந்த தம்பதியினரும் படுகாயமடைந்து மாத்தறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ..
No comments:
Post a Comment