Thursday, October 23, 2008
உலக நாடுகள் எம் பின்னால் இருக்கும் வரை இராணுவ முன்னெடுப்புக்கள் தொடரும்.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு.
பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்ற ஒரேயொரு தொனிப்பொருளின் கீழ் செயற்பட்டு வரும் உலக நாடுகள் அனைத்தும் நமது பின்னால் இருக்கும் வரையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ முன்னெடுப்புக்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். கடந்த 30 வருடகால போர் வரலாற்றில் பலவீனமடைந்த விடுதலைப் புலிகளின் இயக்கம் அவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் மனிதநேயத்தை முன்னிலைப்படுத்தி உலக நாடுகளின் அனுதாபத்தினைப் பெற்றுக்கொள்கிறது. ஆனால் இவ்வாறான, முயற்சிகள் இனிவரும் காலங்களில் அவர்களுக்கு ஒருபோதும் கைகொடுக்கப் போவதில்லை என்று அமைச்சரும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமாகிய கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment